இனி ரேஷன் கடைகளில் பொருள் பெறுவதில் புதிய மாற்றம்..!!
இனி ரேஷன் கடைகளில் பொருள் பெறுவதில் புதிய மாற்றம்..!!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன் தரும் முறையில் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கடையில் அரிசியில் வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு சில இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது வயல் வெளியில் வேலை செய்யும் மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கண் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கண் கருவிழி கருவி மூலமாக பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய உள்ளோம் செய்த பிறகு மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால் தமிழ்நாடு முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

