Theme Check

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்..!

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்..!

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்..!
X

சென்னையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகள் மழையில் சேதம் அடையாமல் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்யப்பட்டு, அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக இரண்டு டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 286 குடோன்களில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகள் எந்த குடோனில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரியாததால் அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை.

இதனை தடுக்கும் விதமாக 286 குடோன்களில் இருந்து செல்லக்கூடிய அரிசி மூட்டைகளில் புதிதாக குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் அவ்வப்போது கோளாறு ஏற்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக, மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சாத்தியமானால், அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை தெரிவிக்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it