வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை !!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை !!

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாலைகள் அடித்துச்செல்லப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியது.

ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. நகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனினும் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளதால் வெள்ளம் வடித்து வருகிறது.
மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மழை பெய்யும் என்றாலும் முன்பைவிட குறைவாகவே மழை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. இதனால் அங்கு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 190-ஐ தாண்டியது.
newstm.in

