Theme Check

புதிய கல்விக் கொள்கை வெளியீடு.. தமிழ் புறக்கணிப்பு.. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு !!

புதிய கல்விக் கொள்கை வெளியீடு.. தமிழ் புறக்கணிப்பு.. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு !!

புதிய கல்விக் கொள்கை வெளியீடு.. தமிழ் புறக்கணிப்பு.. 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு !!
X

தேசிய கல்விக் கொள்கையில் 2019ஆம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்காக பாடமுறை மாற்றம். மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு, மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைப்பு, 6ஆம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் இதில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.
மொழிபெயர்ப்பைக் காண: https://www.education.gov.in/en/nep-languages-2020

இதனால் தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it