சென்னை பேருந்துகளில் இனி ....
சென்னை பேருந்துகளில் இனி ....

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், சென்னையில் 500 மாநகரப் பேருந்துகளில் அபாய பொத்தான் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோலவே, சிசிடிவி கேமரா வசதி மற்றும் பாதுகாப்பு சாதனமும் பொருத்தப்பட்டுள்ளன. நிர்பயா திட்ட நிதியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்த வசதிகள் மேலும் 2,800 மாநகரப் பேருந்துகளில் விரிவுபடுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அபாய பொத்தானை ஒருமுறை அழுத்தினால் அந்த எச்சரிக்கையை மாநகர போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும்.
![]()
பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை 24 மணி நேரமும் ஒரு குழுவானது கண்காணிக்கும். அபாய நேரத்தில் காவல்துறை உதவி எண்ணுக்கு (100) அந்த குழு எச்சரிக்கையை அனுப்பும். அவர்கள், அருகில் உள்ள ரோந்து வாகனத்தை எந்த நேரத்திலும் அந்த இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. ஆனாலும், அது செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிக அதிகமாக இருக்கிறது.
அத்துடன் இல்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை சென்றடைவதற்குள் குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அபாய பொத்தான் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்’ என தெரிவித்தார்.

