சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக புதிய கூட்டமைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக புதிய கூட்டமைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

அகில இந்திய அளவில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை நிலைநாட்டியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி.ஐயும் பாராட்டி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா இணைய வழியாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பீகாரிலிருந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செயல்தலைவர் தேஜஸ்வி யாதவ், மஹாராஷ்ட்ரா ஜகன் சந்திரகாந்த் புஜ்பால் , மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒப்ரின் உள்பட அகில இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்று முதலமைச்சரைப் பாராட்டிப் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலகப் பொருளாத அறிஞர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். ரத்த, பால் பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியமாகும். சமூக நீதியும் பெண்ணுரிமையும் தான் தலையாய லட்சியமாகும். இந்த மகத்தான கொள்கையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லக்கூடிய பணியை தொடங்க உள்ளோம்.
சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க உள்ளேன். சமூகநீதி பற்றி அக்கறை கொண்ட இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் இதில் பங்கேற்பார்கள். இந்த கூட்டமைப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கும். மக்கள் தொகை விகிதத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறுபடலாம். ஆனால் ”எல்லோருக்கும் எல்லாமும்” என்பது தான் இந்தக் கூட்டமைப்பின் அடிப்படையாகும். கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை இந்த கூட்டமைப்பு வலியுறுத்தும்.” என்று பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு வட இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
To further continue our journey in the path to achieve the welfare of depressed and oppressed, we need to implement Social Justice all over India.
— M.K.Stalin (@mkstalin) January 26, 2022

