Theme Check

புதிய கட்டண அறிவிப்பு – திரையரங்குகள் மூடல்!!

புதிய கட்டண அறிவிப்பு – திரையரங்குகள் மூடல்!!

புதிய கட்டண அறிவிப்பு – திரையரங்குகள் மூடல்!!
X

ஆந்திர அரசின் புதிய அறிவிப்பால் மேற்கு கோதாவரி பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அங்குள்ள திரையரங்குகள் குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது. இதற்கு சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரமோஷனுக்கு வந்த நானி, ஆந்திராவில் நடப்பது சரியாக இல்லை, நீங்கள் (அரசியல்வாதிகள்) பார்வையாளர்களை அவமானப்படுத்துகிறீர்கள், 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் என டிக்கெட் கட்டணம் இருப்பதை பார்க்கிறேன் என்றார்.

theatre

ஒரு மளிகைக்கடையைவிட பத்து பேருக்கு வேலை கொடுக்கும் தியேட்டர் பெரியது. ஆனால், மளிகைக்கடைக்கு வரும் வருமானம் திரையரங்குகளுக்கு இல்லை. நினைத்துப் பாருங்கள். பள்ளியில் எல்லா மாணவர்களும் சுற்றுலா செல்ல 100 ரூபாய் தரும்போது, உன்னால் அது முடியாது நீ 10 ரூபாய் தந்தால் போதும் என்பது என்னை அவமானப்படுத்துவது இல்லையா என்றார்.

ஆந்திர அரசின் கட்டண குறைப்பு முடிவால் பாலகிருஷ்ணாவின் அகண்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நானியின் ஷியாம் சிங்கா ராய், ஜனவரியில் வெளிவரயிருக்கும் ஆர்ஆர்ஆர், பீம்ல நாயக், ராதே ஷ்யாம் போன்ற பிரமாண்ட படங்களும் பாதிக்கப்படும்.

theatre

இப்போதே மேற்கு கோதாவரியில் உள்ள 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு கிடைக்கும் என திரையுலகினர் காத்திருக்கின்றனர்.

newstm.in

Next Story
Share it