8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்.. மத்திய அமைச்சரவையும் மாற்றப்படுகிறது !!
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்.. மத்திய அமைச்சரவையும் மாற்றப்படுகிறது !!

பிரதமர் மோடி தலையில் இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறை ஆட்சி ஏற்பட்டத்தில் இருந்து அமைச்சரவை மாற்றப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இதற்கான பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் 8 மாநிலங்களில் திடீரென ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி 4 மாநில ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். புதிய ஆளுநர்கள் விவரம்:-
1. மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. அரியானா ஆளுநராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. திரிபுரா ஆளுநராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. இமாச்சலபிரதேச ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா, அரியானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய அமைச்சர் தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. மத்தியபிரதேச ஆளுநராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8. இமாச்சலபிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
newstm.in

