Theme Check

ரயில் பயணிகள் கவனத்திற்கு - புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு - புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு - புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!
X

இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரயில் பயணத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்வோர் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயிலைத் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் பயணிகள் விமானத்தை விட ரயிலில் அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், ரயிலில் ஏற்றிச் செல்லக்கூடிய லக்கேஜ்களுக்கு வரம்பு உள்ளது, இதைப் புறக்கணித்தால், மற்ற பயணிகள் அதிக லக்கேஜுடன் ரயிலில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில்தான் ரயில்வே புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது.

ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

  • பயணிகள் பெட்டியில் அதிக லக்கேஜ்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று லக்கேஜ்களை முன்பதிவு செய்து, உங்கள் ரயில் பயணத்தை தொடர வேண்டும்.
  • ரயில்வே விதிகளின்படி, பயணத்தின் போது பயணிகள் 40 முதல் 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி. அதை விட அதிகமான லக்கேஜுடன் ஒருவர் பயணம் செய்தால், அவர் சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • ஸ்லீப்பர் வகுப்பில் உள்ள பயணிகள் 40 கிலோ வரையிலான லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். மறுபுறம், ஏசி3 டயர் 50 கிலோ வரை சாமான்களை அனுமதிக்கும் அதே வேளையில் முதல் வகுப்பு ஏசியில் 70 கிலோ வரை சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்.

புதிய அறிவுறுத்தல்களின்படி, கூடுதல் லக்கேஜ் உள்ள பயணிகள் கோச்சில் ஏறினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், காஸ் சிலிண்டர்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், ஆசிட், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், தோல் போன்றவற்றை ரயில்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it