Theme Check

‘தளபதி 66’ குறித்து புதிய தகவல்.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

‘தளபதி 66’ குறித்து புதிய தகவல்.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!

‘தளபதி 66’ குறித்து புதிய தகவல்.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!
X

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்து கடந்த 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் ‘பீஸ்ட்’. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக பேச்சு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில், கடந்த வாரம் ‘தளபதி 66’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, படத்திற்கு பூஜையும் போடப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியது.

எஸ்.வி.சி. கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமன் இசையில் இப்படம் உருவாகிறது.
செலிபிரட்டி க்ரெஷ்..; தளபதி 66 பூஜையில் விஜய்க்கு திருஷ்டி கழித்த ராஷ்மிகா
இந்நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புடன், பாடல் ஒன்றும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.

நடிகர் விஜய், தெலுங்கில் முதன்முறையாக நேரடியாக அறிமுகமாகும் இந்தப் படம் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story
Share it