Theme Check

தஞ்சை மாணவி வழக்கில் புதிய தகவல்கள்! விடுதியில் நடைபெற்ற சடங்கு!!

தஞ்சை மாணவி வழக்கில் புதிய தகவல்கள்! விடுதியில் நடைபெற்ற சடங்கு!!

தஞ்சை மாணவி வழக்கில் புதிய தகவல்கள்! விடுதியில் நடைபெற்ற சடங்கு!!
X

தஞ்சை பள்ளி மாணவி வழக்கில் தற்போது மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் மாற்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், மாணவியின் பூப்படைதல் சடங்கு இந்து முறைப்படி நடந்ததாக சாட்சிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாணவியை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாக ஒரு தரப்பினரால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட விடுதி வார்டன் சகாய மேரியே அந்த சடங்கை ஊர் மக்கள் சிலரது உதவியுடன் நடத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் லாவண்யாவை போல 400க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் படிக்கும் போது, லாவண்யாவை மட்டும் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றும் எண்ணம் வார்டன் சகாய மேரிக்கு இல்லை என பக்கத்து வீட்டுக்காரரான பவுலின் தெரிவித்துள்ளார்.

tnj

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமி பூப்படைந்தார். மாணவி இந்து என்பதால் இந்து முறைப்படி சடங்குகளைச் செய்ய சகோதரி சகாய மேரி உள்ளூர் இந்துக்களை அழைத்ததெல்லாம் நினைவில் உள்ளது.

லாவண்யா மதம் மாற வேண்டும் என்று சகாய மேரி விரும்பியிருந்தால், கிறிஸ்தவ நடைமுறைப்படி பூப்படைதல் சடங்குகளைச் செய்திருப்பார் அல்லது எந்த சடங்கும் செய்யாமல் விட்டிருப்பார். சிறுமி லாவண்யாவுக்கு வார்டன் சகாய மேரி சடங்கு ஏற்பாடு செய்தது இருவருக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது என பவுலின் கூறினார்.

tnj 1

இதேபோல, மைக்கேல்பட்டியில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவர், பென்சில், பேனா வாங்க வெளியே வரும்போது லாவண்யாவை பார்த்து இருக்கிறேன். சிறுமி நெற்றியில் எப்போதும் பொட்டு இருக்கும். கைகளில் வளையல்களும் அணிந்திருப்பார். அவர்களுக்குள் மதமாற்றம் மாதிரியான பிரச்னைகள் இருந்ததாக பேசப்படுவதை நம்ப முடியவில்லை என கூறினார்.

newstm.in

Next Story
Share it