Theme Check

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்!! இனி வாரம் 3 நாள் விடுமுறை.. ?

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்!! இனி வாரம் 3 நாள் விடுமுறை.. ?

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்!! இனி வாரம் 3 நாள் விடுமுறை.. ?
X

கடந்த சில மாதங்களாக பரிசீலனை செய்யப்பட்ட புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் தொழிலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் சில திருத்தங்களை செய்து ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் இந்த புதிய தொழிலாளர் விதிக்கு ஒப்புதல் தரவில்லை.

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிய தொழிலாளர்கள் விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது,

labour-law

புதிய தொழிலாளர் விதிகளின்படி ஊழியர்களை பணி நேரம் 8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரமாக அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில் அதனை ஈடுகட்டும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பணியாளர்கள் ஒரு வாரத்தில் பணி செய்யும் மொத்த வேலை நேரம் மாறுவதற்கு வாய்ப்பில்லை.

தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் எட்டு மணி நேரம் தற்போது வேலை பார்க்கும் ஊழியர்கள் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறையாக பெறுகிறார்கள். ஆனால் புதிய விதியின் படி நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கும் என்பதும் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Salary-hike

மேலும், இந்த புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும் என்றும் இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்றும் இதன் மூலமாக பிஎப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும் என்றும் கூறப்படுகிறது.

Tags:
Next Story
Share it