Theme Check

போலீசார் - பொதுமக்கள் உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

போலீசார் - பொதுமக்கள் உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

போலீசார் - பொதுமக்கள் உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
X

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் - பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த புதிய காவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைவராகவும். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கா.அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முனைவர் கே. ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் சி.இராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் முனைவர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல்துறை குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உறுப்பினர் செயலாளராகவும் நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it