டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான்- ஆய்வில் புதிய தகவல்

டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான்- ஆய்வில் புதிய தகவல்

டெல்டா வகை கொரோனாவை விட ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான்- ஆய்வில் புதிய தகவல்
X

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவக்கூடியது என தகவல்கள் வெளியாகின. இந்த வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது.

இதனால் உலக நாடுகள் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பற்றி உலகமெங்கும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் மட்டும 2 ஆய்வுகள் நடந்துள்ளன. இதில், லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளனர்.

அதன்படி, ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் ஒரு இரவோ அல்லது அதற்கு அதிகமாகவோ தங்க வேண்டியது வருவது, டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று வந்து மீண்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

omicron-Covid

டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு குறைவு என்பதற்கு எங்கள் ஆய்வு சான்றாக அமைகிறது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்களில் ஒருவரான இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் நீல் பெர்குசன் தெரிவிக்கிறார்.

இதேபோல், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒமைக்ரான் பற்றி ஆராய்ந்து உள்ளனர். இந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மூன்றில் இரு பங்கு குறைவுதான் என்பதாகும். ஒமைக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் வெளியாகி உள்ள தரவுகள், இந்த வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு என காட்டுகின்றன என கூறுகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it