சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு.. வரும் 10ம் தேதி முதல் அமல்..!
சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடு.. வரும் 10ம் தேதி முதல் அமல்..!

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே விதித்திருக்கிறது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.
மேலும், ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் நடமாடினாலும், ரயிலில் பயணம் செய்தாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், UTS செயலி வழியாக ஜனவரி 31-ம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன்பதிவு செய்ய முடியாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
Next Story

