Theme Check

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி முதல் புதிய விதிகள்!!

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி முதல் புதிய விதிகள்!!

ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி முதல் புதிய விதிகள்!!
X

ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆன்லைன் பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவை என்று கூறப்பட்டாலும் அதில் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். ஆன்லைன் முலமாக மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் விதிமுறைகளை அனைத்து வங்கிகளும், பரிவர்த்தனை நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகத் தகவல் அனுப்பியுள்ளது.

rbi

புதிய விதிமுறைப்படி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு டோக்கன் முறை பயன்படுத்தப்படும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு நம்பர், காலாவதி தேதி, CVV நம்பர், ஓடிபி போன்ற விவரங்களை வழங்கத் தேவையில்லை.

வாடிக்கையாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப தனியாக டோக்கன் நம்பர் உருவாக்கப்படும். அந்த நம்பரை மட்டும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் போதும். இந்த டோக்கன் நம்பரை சம்பந்தப்பட்ட வங்கியின் வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பிலேயே உருவாக்கிக்கொள்ளலாம்.

rbi

அதற்கான கோரிக்கையை நீங்கள் வைத்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிவர்த்தனை நிறுவனத்திடமிருந்து கோரிக்கை வைக்கப்படும். அதன்பிறகு பரிவர்த்தனை நடைபெறும். இதன் மூலம் கார்டு பரிவர்த்தனைகள் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it