Theme Check

ஷேன் வார்னே மரணத்தில் புதிய திருப்பம் !!

ஷேன் வார்னே மரணத்தில் புதிய திருப்பம் !!

ஷேன் வார்னே மரணத்தில் புதிய திருப்பம் !!
X

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான ஷேன் வார்னே (52), தாய்லாந்தில் உள்ள சொகுசு விடுதியில் மாரடைப்பால் காலமானார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு இன்று உடற்கூறாய்வு நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது. இந்நிலையில், 52 வயதான வார்னேவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

shane warne

வார்னேவுக்கு ஆஸ்துமா மற்றும் இதய நோய் இருந்ததாகவும், இறப்பதற்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரின் உடலில் போதைப்பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் வெளிவுப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக, வார்னே மரணத்தில் பலரும் சந்தேகம் கிளப்பினர். அவருடன் நண்பர்கள் தங்கியிருந்ததாகவும், வெளியே தெரியாத நபர்கள் வார்னேவுடன் விடுதியில் தங்கியிருந்ததாகவும் சிலர் கூறினர். மேலும் உடல்எடை குறைப்பு சிகிச்சையால் வார்னே உயிரிழந்தார் எனவும் தகவல்கள் பரவின. எனினும் இவை அனைத்தும் பொய் என தற்போது தாய்லாந்து காவல்துறை கூறியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it