Theme Check

கேரளாவை மிரட்டும் புதுவித வைரஸ் ! - பீதியில் மக்கள் !!

கேரளாவை மிரட்டும் புதுவித வைரஸ் ! - பீதியில் மக்கள் !!

கேரளாவை மிரட்டும் புதுவித வைரஸ் ! - பீதியில் மக்கள் !!
X

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2ஆவது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஷிகெல்லா என்னும் புதிய வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடும் பாதிப்பில் இருந்து தற்போது சிறிது சிறிதாக பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்த புதிய வைரஸ் அம்மாநில அரசுக்கு சவாலாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இந்த நோயால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதக்கழிவில் கலக்கும் தண்ணீர் மூலம் இந்நோய் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கொரோனாவை போன்று பரவக் கூடியது. அதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it