வடமாநிலங்களை மிரட்டும் புது வைரஸ்.. ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் என்ன?
வடமாநிலங்களை மிரட்டும் புது வைரஸ்.. ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தினாலும் அதனை குணப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் போராடி வருகிறது. கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி வருவதால் அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் பரவல் மக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். இது குறித்து தீவிர பரிசோதனை மேற்கொண்டதில் ’ஸ்க்ரப் வைரஸ்’ என்பது உறுதி செய்யப்பட்டது.
மைட் போர்ட் ரிக்கெட்டிசியோசிஸ் (mite-borne rickettsiosis) என அழைக்கப்படும் ஸ்க்ரப் வைரஸால் மதுரா மாவட்டத்தில் மட்டும் 29 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த வைரஸின் தாக்கம் காணப்படுகிறது. அந்த வைரஸ் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

ஸ்க்ரப் டைபஸ்:
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இது ‘ஓரியன்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் எனக் கூறியுள்ளது. ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்றுள்ள ’லார்வா பூச்சிகள்’ கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்பட்டுள்ளது
ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, உடல் வலிகள், சில நேரங்களில் சொறி. நோயின் தாக்கம் தீவிரமான நிலையை எட்டியிருந்தால் நிமோனிடிஸ், மூளைக்காய்ச்சல், மனநிலை குழப்பம் அல்லது கோமா, இதய செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம்.

ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தியாவை தவிர இந்தோனேஷியா, சீனா, ஜப்பான் மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் கிராமப் புற பகுதிகளில் இதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் ஸ்க்ரப் வைரஸ் பரவலுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் மத்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்க்ரப் டைபஸ் பாதிக்கப்பட்டவருக்கு டாக்ஸிசைக்ளின் (doxycycline) என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
கொசுக்கள் மற்றும் லார்வா பூச்சிகள் ஸ்க்ரப் டைபஸ் நோயைப் பரப்புவதால், அவை கடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
newstm.in

