நியூசிலாந்து பிரதமருக்கு விரைவில் திருமணம்.. காதலரை கரம்பிடிக்கிறார் !!
நியூசிலாந்து பிரதமருக்கு விரைவில் திருமணம்.. காதலரை கரம்பிடிக்கிறார் !!

திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமரானார் ஜெசிந்தா ஆர்டென் (40). ஜெசிந்தா ஆர்டெனுக்கு அந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவு அளிப்பது இதில் இருந்தே உறுதியானது.

இந்த நிலையில், ஜெசிந்தா ஆர்டென்-னுக்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக உள்ள கிளார்க் கைபோர்டு (44) என்பவருடன் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு முன்பே இருவரும் இணைந்து வாழத்தொடங்கினர். இதனால் இவர்களுக்கு தற்போது 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், வரும் கோடைக்காலத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், திருமண தேதியை பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் வெளியிடவில்லை.

தனது திருமணம் குறித்து ஜெசிந்தா கூறும்பொழுது, திருமணத்திற்கான தேதி கிடைத்து விட்டது. இந்த அறிவிப்பினால் நாங்கள் அனைவரிடமும் திருமண தகவலை கூறிவிட்டோம் என்று அர்த்தமல்ல. அதனால், முறைப்படி அழைப்பு விட வேண்டும். எனினும், திருமண நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் திருமண தகவலை வெளியிட்டதும் அதனை அந்நாட்டு மக்கள் தற்போதே கொண்டாட ஆரம்பித்து அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
newstm.in

