Theme Check

மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்..!!

மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்..!!

மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்..!!
X

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2-ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

school

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Application

இந்நிலையில், தற்போது, https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க தொடங்கியதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கல்லூரிகளில் சர்வர் டவுனாக உள்ளது அல்லது ஆள் இல்லை என கூறி வெளியில் பதிவு செய்ய கூறுவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story
Share it