Theme Check

இந்தியாவில் உருவான புதிய உருமாறிய கொரோனா.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO !

இந்தியாவில் உருவான புதிய உருமாறிய கொரோனா.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO !

இந்தியாவில் உருவான புதிய உருமாறிய கொரோனா.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட WHO !
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படுவேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி இருப்பதாகவும், அது வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் பி.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பி1617 பிரிவைச் சேர்ந்தது.

இந்த வைரஸ், இ484கியூ, எல்452ஆர் என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுது.
மேலும், இந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால் தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, இந்தியாவுடனும், இந்த கொரோனா பரவிய இதர நாடுகளுடனும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் மரியா வன் கேர்கோவ் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it