Theme Check

கோடையில் புதிதாக உருமாறிய கொரோனா அலை உருவாகலாம்.. எச்சரிக்கும் ரிப்போர்ட் !!

கோடையில் புதிதாக உருமாறிய கொரோனா அலை உருவாகலாம்.. எச்சரிக்கும் ரிப்போர்ட் !!

கோடையில் புதிதாக உருமாறிய கொரோனா அலை உருவாகலாம்.. எச்சரிக்கும் ரிப்போர்ட் !!
X

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றி பரவியது. அடுத்த சில காலத்தில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிபடைத்த கொரோனாவின் தாக்கம் இன்றுவரை ஓயவில்லை கொரோனா வைரஸ் உருமாற்றங்களை அடைந்து, பரவி அல்லல்படுத்துகிறது. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது, இஸ்ரேல் நாட்டில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளனர். அதன் முடிவு, இந்த கோடை காலத்தில் டெல்டா வைரஸ் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

corona corona

கொரோனாவை பொறுத்தமட்டில் நிறைய காரணிகள் உள்ளன. இன்னொரு டெல்டா அலை உருவாகலாம் அல்லது வேறொரு உருமாறிய கொரோனா அலை வரலாம் என்று காட்டுகிறது.

இதுவரையில் ஆராய்ச்சியாளர்கள், புதிதாக ஒரு உருமாறிய வைரஸ் வருகிறபோது அது தனக்கு முந்தைய முன்னோடி வைரசை வீழ்த்தும் என்று கூறி வந்தனர். ஆனால், இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முரணாக கூறி உள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்கும்போது, டெல்டா மாறுபாடு குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிற இயக்கவியலுக்கு மாறாக, கழிவுநீர் கொண்டு நடத்திய ஆராய்ச்சியில் பெறப்பட்ட முடிவுகள், ஒமைக்ரான் அளவு அதிகரித்தாலும் கூட, டெல்டா வைரசின் ரகசிய சுழற்சி இருக்கும் என இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

corona

டெல்டா வைரஸ் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய வைரசாக கருதப்பட்டது. ஆனால் ஒமைக்ரான் இயக்கவியல் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டி உள்ளது என இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it