Theme Check

செல்ஃபி மோகத்தால் ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி!!

செல்ஃபி மோகத்தால் ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி!!

செல்ஃபி மோகத்தால் ஆற்றில் விழுந்த புதுமண தம்பதி!!
X

கேரள மாநிலம் கோழிக்கோட்டு மாவட்டம் ஜானகி காடு அருகே குற்றியாடி ஆற்றுப்பகுதிக்கு புதுமண தம்பதியினர் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றிருந்தனர்.

அப்போது குடும்பத்தாருடன் போட்டோ எடுத்து விட்டு தனியாக புதுமண தம்பதி இருவரும் அங்கு உள்ள பாறைகளின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர்.

இதில் கால் தவறி மணமக்கள் இருவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதைப்பார்த்த குடும்பத்தார் கூச்சலிடவே அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்க போராடியுள்ளனர்.

Kerala-couple_drowned

இதில் மணமகள் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். ஆற்றுச் சுழலில் மாட்டிக்கொண்ட மணமகன் ரஜிலால் என்பவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சடலமாக தான் மீட்கப்பட்டார்.

கோழிக்கோடு பாலோரி பகுதியை சார்ந்த ரஜி லாலுக்கும் அப்பெண்ணுக்கும் கடந்த மாதம் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாள்களில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it