Theme Check

திருமணமான 5 நாட்களில் புதுமண தம்பதி வெட்டிபடுகொலை !!

திருமணமான 5 நாட்களில் புதுமண தம்பதி வெட்டிபடுகொலை !!

திருமணமான 5 நாட்களில் புதுமண தம்பதி வெட்டிபடுகொலை !!
X

சோழபுரத்தில் திருமணமான 5 நாட்களில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் சென்னையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணத்துக்கு சரண்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் திருமணம் முடிந்து சென்னையில் தங்கியிருந்த நிலையில், பிரச்சனை வேண்டாம் என கூறி சரண்யாவின் குடும்பத்தினர் தம்பதியை விருந்துக்கு அழைத்தனர்.

இதனை ஏற்று சொந்த ஊர் வந்த சரண்யா - மோகன் தம்பதி தம்பதியினர் கும்பகோணம் சென்றனர். ஆனால் அங்கு இருவரையும் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த சரண்யா, அவரது கணவர் மோகன் ஆகியோர் ஊர் திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

fdg

இதனிடையே, காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 2 போரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் தலைமறைவாகி உள்ளார். சரண்யாவுக்கு அவரது சகோதரர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்த நிலையில் காதல் திருமணம் செய்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.

மேலும் கொலை செய்யப்பட்ட சரண்யா - மோகன் ஜோடி சாதி மறுப்பு திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it