இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியால் பிரிந்த புதுமண தம்பதி !!
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியால் பிரிந்த புதுமண தம்பதி !!

இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், வாட்ஸ் அப்பில் இந்திய வீரர்களை தவறாக பதிவிட்டு ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் தன் இளம் மனைவி மீதே கணவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லீக் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. பாகிஸ்தானின் இந்த வெற்றியை இந்தியாவில் சிலர் கொண்டாடியதாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். ஆனால் தன் மனைவி மீதே கணவர் ஒருவர் இப்படியொரு புகாரை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவர் இஷான் மியான். இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ரபியா சம்ஷி என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக தனது மனைவியும், அவரின் உறவினர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடியதாகவும், இந்திய வீரர்களை அவமதிக்கும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று கஞ்ச் போலீஸ் நிலையத்தில் அவருடைய கணவர் இஷான் மியான் புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல்நிலையத்தில் இஷானில் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்யாததால் இஷான், தனது மனைவி வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களின் ஸ்கிரீன் ஷாட்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்று தற்போது புகார் அளித்தார். இதனையடுத்து தற்போது இஷானின் மனைவி ரபியா மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுமண தம்பதிபளாக இருந்தாலும் திருமணமான 4 மாதத்தில் இஷானுக்கும் அவருடைய மனைவி ரபியாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
newstm.in

