அடுத்த மாசம் வளைகாப்பு! சாலை விபத்தில் செய்தியாளர் ராஜசேகர் உயிரிழப்பு!
அடுத்த மாசம் வளைகாப்பு! சாலை விபத்தில் செய்தியாளர் ராஜசேகர் உயிரிழப்பு!

கோவை, அவிநாசி அருகே நரியம்பள்ளிப்புதூரில் அரசு பேருந்து மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட செய்தியாளர் ராஜசேகர், அவரது தாயாரும் உயிரிழந்தனர்.

இன்று, செய்தியாளர் ராஜசேகரும், அவரது தாயார் யமுனா ராணி(52), சகோதரி பானுப்பிரியா(31), இவரது ஆண் குழந்தை இன்ப நித்திலன்(2) ஆகியோர் கோவை மேட்டுப்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். கார், அவிநாசி நரியம்பள்ளிப்புதூர் அருகே சென்ற போது, ஊட்டியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும், காரும் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த ராஜசேகரின் தாயார் யமுனா ராணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜசேகர் கோவை தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரி பானுப்பிரியா, குழந்தை இன்ப நித்திலன் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செய்தியாலர் ராஜசேகரின், மனைவிக்கு அடுத்த மாதம் வளைகாப்பு சீமந்தப் நிகழ்ச்சி திட்டமிட்டிருந்த நிலையில் செய்தியாளர் தனது தாயாருடன் மரணம் என்ற பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
newstm.in

