Theme Check

அடுத்த ஷாக்.. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் அதிகரிப்பு !!

அடுத்த ஷாக்.. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் அதிகரிப்பு !!

அடுத்த ஷாக்.. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் அதிகரிப்பு !!
X

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவருகிறது.

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது சென்னையில் இருந்து விமான பயண கட்டணம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்பு தற்போதுன், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

airport

குறிப்பாக உள்நாடு மற்றும் உள்மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ஆக இருந்த நிலையில் தற்போது 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ல் இருந்து ரூ.10,000ஆகவும், திருச்சிக்கு ரூ.3,500ல் இருந்து ரூ.5000ஆகவும், கோவைக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.6000 ஆகவும், ஐதராபாத்துக்கு ரூ.6000-ல் இருந்து ரூ.6500 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல், மும்பைக்கு ரூ.8600ல் இருந்து ரூ.9000ஆகவும், பெங்களூருக்கு ரூ.5500-ல் இருந்து ரூ.6000 ஆகவும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

airport

இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது. சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்பதன் எதிரொலியாக இந்த விலை உயர்வு உள்ளது.

newstm.in

Next Story
Share it