அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டும் ஹிட் பட தமிழ் நடிகர்! இவ்வளவு தாங்க சினிமா?!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டும் ஹிட் பட தமிழ் நடிகர்! இவ்வளவு தாங்க சினிமா?!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு சாப்பிட கூட வழியில்லாமல் தவித்து வருகிறார்.
பரியேறும் பெருமாள் படத்தில் நாயகன் கதிரின் தந்தையாக இவர் நடித்திருப்பார். அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான தங்கராசுவை மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க வைத்திருந்தார்.
ஆனால் அதற்கு பிறகு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. வயதாகிவிட்டதால் தெருக்கூத்துகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மகள்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

வருமானத்திற்கு கஷ்டப்பட்ட இவர் பனங்கிழங்கு உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் கொரோனா நேரத்தில் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும் கனமழையால் இவரது வீடும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
முன்பு ஒரு வேளை உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது வேலையும் இல்லாததால் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகிறார் தங்கராசு. இவரது கஷ்டம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வீட்டை சரிசெய்து, ஒரு மகளுக்கு தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உறுதி அளித்துள்ளார். மேலும் திரையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in

