இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அரசு திட்டவட்ட அறிவிப்பு..!
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. அரசு திட்டவட்ட அறிவிப்பு..!

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, அரசு மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஒமைக்ரான் பரவலை தடுக்க அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இன்று (28ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்படி, இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
கர்நாடக அரசின் இந்த இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை கர்நாடக அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
Next Story

