இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!

ஒமைக்ரான் வைரஸ் தொற்று டெல்டா வகை கொரோனா தொற்றுகளை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில், இந்தியாவின் டெல்லி, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

