Theme Check

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு..!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு..!

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசு..!
X

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ம் தேதி கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவின் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை (25ம் தேதி) இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. மேலும், திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை, ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரபிரதேச மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it