குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் வரை போராடுவேன்.. நிர்பயா தாயார் ஆவேசம்..
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் வரை போராடுவேன்.. நிர்பயா தாயார் ஆவேசம்..

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து போராடுவேன் என பாலியல் கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் நீதிமன்றம் அளித்த உத்தரவால் மீண்டும் தள்ளிப்போயுள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2வது முறையாக இன்று தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாயார் கூறுகையில், தூக்கில் போட மாட்டார்கள் என குற்றவாளிகளின் வழக்கறிஞர் சவால் விடுகிறார் என்று கூறியுள்ளார். தண்டனை அளிக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். அரசு அவர்களை தூக்கில் போட வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆசா தேவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். 
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒருவருடைய கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
newstm.in


