Theme Check

"தமிழகத்தில் 3,500 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! பட்ஜெட்டில் நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !

"தமிழகத்தில் 3,500 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! பட்ஜெட்டில் நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 3,500 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள்! பட்ஜெட்டில் நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !
X

தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்றும், மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் வழித்தடங்களில் இந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும் விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்,

வருவாயை பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குறிப்பாக, காலாவதியான வாகனங்களை, அதாவது 15 ஆண்டுகள் ஆன வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் உடைப்பதற்க்கான தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக உரிமையை அளித்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it