பட்ஜெட்டில் ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்பு! நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !
பட்ஜெட்டில் ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்பு! நிர்மலா சீதாரமன் அறிவிப்பு !

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், வருவாயை பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும், 11 ஆயிரம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும்; ஏற்கனவே 41,000 கி.மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குறிப்பாக, வரும் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.5.54 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார். மின்னணு முறையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை காண்பதற்காக இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

