முழு ஊரடங்கு கிடையாது, உள்ளூர் கட்டுப்பாடு மட்டும் இருக்கும் - நிர்மலா சீதாராமன்
முழு ஊரடங்கு கிடையாது, உள்ளூர் கட்டுப்பாடு மட்டும் இருக்கும் - நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு அத்துடன் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மத்திய அரசு பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இல்லை எனவும், உள்ளூர் கட்டுப்பாடு மட்டுமே இருக்கும் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே முதல் அலையிலேயே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து இருப்பதாகவும் மேலும் சீர்குலைக்க மத்திய அரசு விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், தடுப்பூசிகளை செலுத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Tags:
Next Story

