விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்

விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
இந்த பட்ஜெட் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இருக்கும்
துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமையும்
இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது.
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குஇகிறது
எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி நடைமுறை ஏப்ரல் 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும்.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும்.
2014-19 வரை 28,400 கோடி டாலர் அன்னிய முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்தரவாதமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டியால் சராசரியாக மாத குடும்ப செலவீனங்களில் 4 சதவீதம் வரை மிச்சப்படுத்தப்படுகிறது.
அனைத்து மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சி, சமூக நலன்,இலக்கு ஆகிய கொள்கைகள் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.
6.11 கோடி விவசாயிகள் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசி வருகிறார்.
newstm.in

