ராஜ்யசபா தேர்தல் - நிர்மலா சீதாராமன் வெற்றி..!!
ராஜ்யசபா தேர்தல் - நிர்மலா சீதாராமன் வெற்றி..!!

15 மாநிலங்களில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 எம்.பி.க்களுக்கான தேர்தல் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். மராட்டியம், ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் போட்டி அதிகமாக இருப்பதால் ஓட்டுப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றன. மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிட்டனர். பா.ஜ.க.-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் இருந்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து போட்டியிட்ட ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக காங்கிரஸ் சார்பில் முதல் வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். ஜேடிஎஸ் வேட்பாளர் குபேந்திரா ரெட்டி, காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் தோல்வியடைந்தனர்.

