நிதீஷ் வீரா மறைவால் பாதியில் நிற்கும் செல்வராகவன் படம்..!

நிதீஷ் வீரா மறைவால் பாதியில் நிற்கும் செல்வராகவன் படம்..!

நிதீஷ் வீரா மறைவால் பாதியில் நிற்கும் செல்வராகவன் படம்..!
X

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த நடிகர் நிதீஷ் வீராவின் மறைவால் செல்வராகவன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் நாடே கையறு நிலைக்கு சென்றது. வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் உரிய சிகிச்சை கிடைக்காமல் இறந்துபோன துயரமான செய்தி தினந்தோறும் வெளியானது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் நிதீஷ் வீரா கடந்த மே 17-ம் தேதி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்தது.

அசுரன் படத்தில் நடித்து கவனமீர்த்த அவர் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அதில் முக்கியமாக செல்வராகன் நடித்து வரும் சாணிக்காயிதம் படமும் ஒன்று.

அந்த படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாதிக்கும் மேற்பட்ட காட்சியில் நிதிஷ் வீரா நடித்து முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடைய திடீர் மறைவுக்கு காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளனர்.

இதனால் நிதீஷ் வீரா நடித்த கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்து அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மீண்டும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it