செம கெத்து.. ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியை முடித்த நிவேதா பெத்துராஜ் !

செம கெத்து.. ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியை முடித்த நிவேதா பெத்துராஜ் !

செம கெத்து.. ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியை முடித்த நிவேதா பெத்துராஜ் !
X

’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு ’டிக் டிக் டிக்’ ’சங்கத்தமிழன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் உயர்ந்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள ’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட நிவேதா, தனது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதாவது, அவர் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பயிற்சியில் லெவல் 1 - ஐ முடித்து இருக்கிறார். இதற்கான சான்றிதழை நிவேதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து நடிகை நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியதாவது, கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8ஆம் வகுப்பு படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது. என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015-ல் “Dodge Challenger” ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன்.

UAE நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய V6 Engine இருந்ததை, எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும் Lexus, Rolls Royce, Chevrolet போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் Dubai Motor shows-க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது.

கோவையில் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன் ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள். அக்குழுவில் ஒரே பெண் நான் தான். Tracks-ல் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது Lap timings என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது. இது Motorsports ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்கிற மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது என கூறினார்.

மேலும், நான் முழுதாக தயாரானபிறகு ஆசைப்பட்டால் மட்டுமே Championships போட்டிகளில் கலந்துகொள்வேன். இப்போதைக்கு எனது முழு விருப்பமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிக்க வேண்டும் என்பது தான் எனவும் அவர் கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it