Theme Check

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பாஜக தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி..!

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பாஜக தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி..!

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. பாஜக தனித்து போட்டி.. அண்ணாமலை அதிரடி..!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட பங்கீட்டில் அதிமுக - பாஜக இடையே உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: அண்ணாமலை- Dinamani
எங்களுக்கு அதிமுக தலைமை மீது எந்த வருத்தமும் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி.

பாஜகவின் பொது எதிரி திராவிட முன்னேற்றக் கழகம் தான். பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி. தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்பதால் அதிமுகவுடன் முறிவு என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it