Theme Check

மதம் மாறுவதற்கு தடையில்லை.. ஐகோர்ட் அதிரடி..!

மதம் மாறுவதற்கு தடையில்லை.. ஐகோர்ட் அதிரடி..!

மதம் மாறுவதற்கு தடையில்லை.. ஐகோர்ட் அதிரடி..!
X

பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர் “பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று அறிவிக்க கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் விசாரித்தனர்.

அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை.

ஒருவர் தான் விரும்பும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story
Share it