பட வாய்ப்பு இல்லை... வீடு வீடாக சோப் விற்கும் பிரபல தமிழ் நடிகை!!
பட வாய்ப்பு இல்லை... வீடு வீடாக சோப் விற்கும் பிரபல தமிழ் நடிகை!!

பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா, 90களில் முக்கியமான நடிகையாக இருந்தார். நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தவர் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார்.
ஆனால் சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், இப்போது நடிப்பு வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறேன், மோசமான நிலையில் இருக்கிறேன், இந்த நிலை மாற வேண்டுமென்றால் எனக்கு வேலை வேண்டும். வேலையும் இல்லை, எனக்கு பொருளாதாரமும் இல்லை. அதனால் வீடு வீடாக சென்று சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

இப்போது கூட கடன் இல்லை, வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் வேலை இல்லை. இப்போது செய்கிற வேலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை. பெருமைப்படுகிறேன். எந்த வேலை இருந்தாலும் சொல்லுங்கள் நான் நிச்சயம் செய்து விட்டு அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
நான் ஆடம்பரமான ஆள் இல்லை, பட்டுப்புடவை கட்டுவதில்லை, யோகா பயிற்சியின் மூலம் ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன், ஆனால் இப்போது பொருளாதாரத்தில் மாற்றம் இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் எனக்கு ஒரு மெகா சீரியல் வேண்டும்.
நான் பிழைத்தது சீரியலை வைத்துதான். சினிமாவால் இல்லை. எனக்கு சினிமா சோறு போடவில்லை. டிவி தான் சோறு போட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
newstm.in

