Theme Check

மீண்டும் ஊரடங்கு கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சர்!

மீண்டும் ஊரடங்கு கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சர்!

மீண்டும் ஊரடங்கு கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சர்!
X

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நோய் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாவட்டங்களில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவல் அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உயிரிழப்புக்கள் குறைவாகவே உள்ளது. மீண்டும் ஊரடங்கு என்னும் பேச்சுக்கே இடம் கிடையாது. இதற்கு ஊரடங்கு தீர்வாக இருக்காது. ஆனால் இனி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமலேயே பாதிப்பு அடைந்தவர்கள். அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

நோய் பாதித்தவர்களை கண்டுபிடித்தல், சோதனை செய்தல் மற்றும் சிகிச்சை அளித்தல் முறையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சமூக கூட்டங்கள் மற்றும் திருமணங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.பொதுமக்களும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுவதன் மூலமும் பொதுமக்கள் புதிய ஊரடங்கு வராமல் தவிர்க்கலாம். இது தவிர மகாராஷ்டிராவில் மட்டும் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Tags:
Next Story
Share it