Theme Check

சாக்கு போக்கு சொல்லக்கூடாது.. ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

சாக்கு போக்கு சொல்லக்கூடாது.. ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

சாக்கு போக்கு சொல்லக்கூடாது.. ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!
X

‘எந்தக் காரணமும் சொல்லாமல் தேர்தல் பணிகளுக்குச் செல்ல வேண்டும்’ என, ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வி அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு மூன்று கட்டமாக தேர்தல் பணி குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஆனால், பயிற்சிக் காலத்தில் சில ஆசிரியர்கள் விடுப்பு கேட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், ’தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவது தொடர்பாக எந்தவித காரணங்களும் கூறாமல், பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

மாறாக, தவறான காரணம் கூறி தேர்தல் பணிகளை புறக்கணித்ததாக புகார் எழுந்தால், அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it