Theme Check

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு கட்டணம் இல்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு கட்டணம் இல்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு !

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு கட்டணம் இல்லை: சிபிஎஸ்இ அறிவிப்பு !
X

கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவா்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2அலை பரவி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் உதவுகின்றன.

corona

இந்த நிலையில் சிபிஎல்இ படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இழந்தார் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா தொற்று நாட்டை மிகவும் பாதித்துள்ளது. அது மாணவா்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்கள் கொரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்தவா்களாக இருந்தால் அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம்.

corona

பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்கும் போது கொரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்த மாணவா்களின் தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ளாா்.

newstm.in

Tags:
Next Story
Share it