கைகள் இல்லை.. ஆனால் தன்னம்பிக்கை உண்டு..!! சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவி..!!
கைகள் இல்லை.. ஆனால் தன்னம்பிக்கை உண்டு..!! சாதிக்க துடிக்கும் பள்ளி மாணவி..!!

அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் லட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத போதிலும் தன்னம்பிக்கையுடன் ஆசிரியர் உதவியுடன் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவருக்கு பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லை. இதனால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டார்.இதனால் மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் இல்லத்தில் வளர்ந்தார். இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தேர்வு எழுதியுள்ளார்
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5 ஆயிரத்து 42 மாணவர்களும் 5 ஆயிரத்து 353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ - மாணவியர் தேர்வை எழுதுகின்றனர் என்பது நினைவுகூறத்தக்கது.
Next Story

