யாருக்கு வாக்களித்தாலும் தாமரையிலும் பதிவாகிறது.. தேர்தலில் முறைகேடு.. திரிணமூல் காங்கிரஸ் பகீர் புகார் !!
யாருக்கு வாக்களித்தாலும் தாமரையிலும் பதிவாகிறது.. தேர்தலில் முறைகேடு.. திரிணமூல் காங்கிரஸ் பகீர் புகார் !!

திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது மேற்கு வங்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேநேரத்தில் அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று தொடங்கியது. அங்கு முதல்கட்டமாக இன்று 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் 47 தொகுதிகளும் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.

மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் காலை 10.00 மணி நிலவரப்படி 15.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய 3 மணி நேரத்திலேயே, முதல்கட்டத் தேர்தலில் பெருமளவு முறைகேடு நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்தாக அடையாளச் சீட்டில் பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜவின் தாமரைச் சின்னத்தில் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்குப்பதிவு விவரங்களை திடீரென மாற்றி அறிவித்து விட்டதாகவும் புகார் கூறியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
What is happening @ECISVEEP?!
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?!
Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
newstm.in

