"பால் தட்டுப்பாடு ஏற்படாது" : ஆவின் விளக்கம்!
"பால் தட்டுப்பாடு ஏற்படாது" : ஆவின் விளக்கம்!

சென்னை மாதவரம் பால் பண்ணையில் பணிகள் யாவும் பாதிக்கப்படவில்லை என்றும் பால் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், பால் உற்பத்தி பணிகள் தடைப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை ஆவின் நிறுவனம் திட்டவிட்டமாக மறுத்துள்ளது.பால் பண்ணைகள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நூறு சதவிகிதம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், நுழைவு வாயில்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமான பாலை தடையின்றி வழங்கும் செயலை ஆவின் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் தவறான தகவல்களை மக்கள் புறம்தள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in
Tags:
Next Story

