Theme Check

பணம், நகை இல்லையா? - சிறுவனை சரமாரியாக கத்தியால் குத்திய கொள்ளை கும்பல்

பணம், நகை இல்லையா? - சிறுவனை சரமாரியாக கத்தியால் குத்திய கொள்ளை கும்பல்

பணம், நகை இல்லையா? - சிறுவனை சரமாரியாக கத்தியால் குத்திய கொள்ளை கும்பல்
X

பெங்களூரு ரிச்மண்ட் டவுன் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் லாரல் லேன் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனை பைக்கில் நீண்ட நேரம் பின்தொடர்ந்த இருவர், ஆள் அரவமற்ற பகுதியில் வழிமறித்து பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளனர். சிறுவனிடம் பணம், நகை உள்ளிட்ட பொருள் எதுவும் இல்லை என்று மறுத்ததால், அவர்கள் சிறுவனை மிரட்டத் துவங்கினர். அவன் எதிர்த்ததால், கைகலப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் திருடர்கள் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

சிறுவன் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளான். அவனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டு இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறான்.

நகை, பணம் ஏதும் கிடைக்காத விரக்தியில் திருடர்களால் கத்தியால் குத்தப்பட்ட சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். பெங்களூரு ரிச்மண்ட் டவுன் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் லாரல் லேன் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனை பைக்கில் நீண்ட நேரம் பின்தொடர்ந்த இருவர், ஆள் அரவமற்ற பகுதியில் வழிமறித்து பணம், நகை கேட்டு மிரட்டியுள்ளனர். சிறுவனிடம் பணம், நகை உள்ளிட்ட பொருள் எதுவும் இல்லை என்று மறுத்ததால், அவர்கள் சிறுவனை மிரட்டத் துவங்கினர். அவன் எதிர்த்ததால், கைகலப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் திருடர்கள் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். சிறுவன் ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளான். அவனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிறுவனுக்கு 36 தையல்கள் போடப்பட்டு இப்போது வீட்டில் குணமடைந்து வருகிறான். இது தொடர்பாக அசோக் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் 18 வயது கூட நிரம்பாத சிறார்களாக இருப்பதாகவும் திருட்டு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். மத்திய பெங்களூருவில் அமைந்துள்ள ரிச்மண்ட் டவுன் பெங்களூரின் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அசோக் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில், குற்றவாளிகள் 18 வயது கூட நிரம்பாத சிறார்களாக இருப்பதாகவும் திருட்டு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மத்திய பெங்களூருவில் அமைந்துள்ள ரிச்மண்ட் டவுன் பெங்களூரின் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it